பொதுவாக நமது மூன்று வேளை உணவில் சில வகை உணவு வகைகளை நாம் எடுத்து கொண்டாலே போதும் நாம் மருந்து மாத்திரையில்லாமல் வாழலாம் ,அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.சர்க்கரை நோய் வராமல் தடுக்க சிட்ரஸ் போன்ற பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்
2.பெண்கள் அதிக அளவில் சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்வதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும்.ஆனால் அவற்றில் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடணும்
3. உடம்பில் கார்போஹைட்ரேட் அளவு குறைய பீன்ஸ்,சோயா பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை போன்ற கிளைசெமிக் (Glycaemic) குறியீட்டில் குறைந்த எண்களை கொண்ட உணவுகளை எடுத்து கொள்வோம் .
4.செரிமான கோளாறு உள்ளவர்கள் பருப்பு மற்றும் தானிய வகைகளை எடுத்து கொள்வோம் .இவற்றில் நார்ச்சத்து மற்றும் பைபர் போன்ற சத்துக்கள் உள்ளன .
5.. சல்மான், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதால் செரிமானம் மெதுவாக நடைபெறும்
6.இதனால் உங்களுக்கு அடிக்கடி பசி என்ற உணர்வு தோன்றாது.மேலும் அவற்றை எண்ணெயில் பொரித்து சாப்பிட வேண்டாம்