அதிமுக கட்சிகள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம் தெரிவித்து இரு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
*அமைச்சர் பதவிக்கான துளியும் தகுதியற்ற ஒட்டுண்ணி போன்ற ரகுபதியின் பிதற்றலுக்கு கடும் கண்டனம்* விடியா திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் வெட்டவெளிச்சமாக்கிவிட்ட விரக்தியில், ரகுபதி எனும் உதிர்ந்த ரோமம் பதில் என்ற பெயரில் வாந்தியைக் கக்கியிருக்கிறது. அமைச்சர் என்ற பதவிக்கான எந்தவித தகுதியுமே இல்லாத வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி.
அண்ணா தி.மு.க. வேட்டியைக் கட்டி அரசியல் வாழ்வு பெற்று, இந்த இயக்கத் தொண்டர்கள் சிந்திய வியர்வையிலும் ரத்தத்திலும் சட்டமன்ற உறுப்பினராகி, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெரும் உழைப்பால் அமைச்சர் பதவியைப் பெற்ற இந்த ரகுபதிக்கு, வாழ்வளித்த இயக்கத்தின் மீதே இழிச்சொல் உரைக்க நா கூசவில்லையா? அஇஅதிமுக கொடுத்த முகவரியால் இன்று வரை அரசியல் பிழைப்பு நடத்தும் ரகுபதி, திமுகவின் முதல் குடும்பத்தின் சிறந்த கொத்தடிமை விருது பெற முயற்சிப்பது அவருடைய தனிப்பட்ட வேள்வியாக இருக்கலாம். அதற்கு அஇஅதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக அவரையே வந்து சேரும். கருணாநிதி ஆட்சியில் விவசாய பம்பு செட்களுக்காண மின் கட்டணம் குறித்து கேட்ட விவசாயிகளை ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வரலாற்றை ரகுபதி திமுக-வில் இணைந்த பின் வசதியாக மறந்து விட்டாரா?
திருநெல்வேலி நீதிமன்ற வாயிலில் நடந்த கொலையில், விடியா திமுக அரசின் காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க, குற்றவாளிகளைப் பிடித்தது வழக்கறிஞர்கள் தான் என்பதை நீதிமன்ற வழக்கறிஞர் அளித்த பேட்டியை தமிழ்நாடே பார்த்துவிட்ட பிறகும், ரகுபதியை ஏவி இப்படி ஒரு அறிக்கையை விடுவதற்கு ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் மீது மாறாப் பற்றுடன், கொள்கைப் பிடிப்புடன், எல்லாக் காலங்களிலும் இந்த இயக்கத்தோடும் மக்களோடுமே இருந்த எங்கள் கழகத்தின் தொண்டர் தான் இன்றைக்கு இந்த இயக்கத்தின் காவலராக, தீயசக்தியின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் மக்களுக்கான ஆட்சியை அமைப்பதற்கான திடமான தலைமையாகக் திகழும் மாட்சிமை பொருந்திய பொதுச்செயலாளராக இருக்கிறார்.
கருணாநிதி குடும்பத்தின் வாரிசு, அதுவும் ஆண் வாரிசு மட்டுமே தலைவராக முடியும் என்ற நிலையில் உள்ள தி.மு.க.-வின் ஏவல் கொத்தடிமைகளில் ஒன்றாக இருக்கும் ரகுபதிக்கு எங்களைப் பற்றிப் பேச எப்போதுமே அருகதை இல்லை.
குடும்ப ஆட்சி நாட்டைக் கெடுக்கும்!
ஒட்டுண்ணிகள் கட்சியைக் கெடுக்கும்!
திரு. ஸ்டாலின் குடும்பத்தார் கால்களில் ஊர்ந்துக்கொண்டு இருக்கும் ஒட்டுண்ணியான ரகுபதி இத்தோடு நாவடக்காவிடின், மக்கள் துணையோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதற்குரிய பாடத்தைப் புகட்டும்.
ரகுபதி போன்ற ஒட்டுண்ணிகளிடம் நீங்களும் ஜாக்கிரதையாகவே இருங்கள் திரு. ஸ்டாலின் அவர்களே!