பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ... நிர்மலா சீதாராமன் அதிரடி விளக்கம்!
Dinamaalai December 22, 2024 08:48 PM

 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும், மாநில நிதி அமைச்சக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் ஜிஎஸ்டி வரி பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். குறிப்பாக பாப்கார்னுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்க பரிந்துரை செய்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் பாப்கார்னின் பல்வேறு பண்புகள் மற்றும் தயாரிப்பு முறைகளில் இருந்து வரி வேறுபடுகிறது.


சாதாரணமாக பேக் செய்யப்படாத உப்பு மசாலா கலந்த பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி வரியும், பேக் செய்யப்பட்ட பாப்கார்ன்களுக்கு 12% ஜிஎஸ்டியும், சாக்லேட் பாப்கார்ன்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாப்கார்ன்களுக்கு ஜிஎஸ்டி வரி பரிந்துரை செய்த நிர்மலா சீதாராமனை, நெட்டிசன்கள் பாப்கார்னை வைத்து விவாதத்தை எழுப்பியதோடு, மீம்ஸ்களை பரப்ப தொடங்கியுள்ளனர்.இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  கேரமல் பாப்கார்னில் சர்க்கரை சேர்க்கப்படுவதால், இனிப்பு பண்டங்களுக்கு விதிக்கப்படும் வகையில், அவற்றுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது

 

இந்த வரி சிக்கல்கள் குறித்து கூடுதல் தெளிவுபடுத்தும் வகையில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) விரைவில் ஒரு சுற்றறிக்கையை வெளியிடும். இது குறித்த ஆலோசனை ஜனவரி மாதம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.