தமிழ்நாட்டிற்கு கருணாநிதி நாடு என்று பெயர் மாற்றிவிடுங்கள்… சீமான் பரபரப்பு பேட்டி…!!!
SeithiSolai Tamil December 23, 2024 01:48 AM

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டுக்கு கருணாநிதி நாடு என்ற பெயரை மாற்றி விடலாம். தமிழகத்தில் கழிப்படம் மற்றும் குடிப்பிடத்தை தவிர மற்ற அனைவருக்கும் கருணாநிதியின் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது. இங்கு வேறு எந்த இடத்திலும் கருணாநிதியைத் தவிர வேறு எந்த தலைவர்களின் பெயரையும் வைக்க முடியாதா அல்லது தலைவர்களுக்கு தான் தகுதி இல்லையா. தமிழ்நாட்டில் உள்ள எல்லா அடையாளங்களையும் மூடிவிட்டு எல்லா தலைவர்களையும் மறைத்துவிட்டு பெருமைமிகு அடையாளங்களை எல்லாம் மூடிவிட்டு கருணாநிதி பெயரை மட்டுமே அனைத்திற்கும் வைக்கிறார்கள்.

கருணாநிதிக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம். ஜல்லிக்கட்டுக்கும் மருத்துவமனைக்கும் கூட கருணாநிதி பெயர் தான் வைக்கப்படுகிறது. எனக்கு எப்போதுமே இஸ்லாமிய மக்கள் ஓட்டு போட்டது கிடையாது. அவர்கள் இனியும் ஓட்டு போடுவார்களா என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மேலும் இஸ்லாமியர்கள் இறைதூதரே வந்து சொன்னாலும் திமுகவுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவார்கள். நான் பாஜகவின் பி டீம் என்றால் ஏடீம் யார்.? மேலும் திமுக தான் பாஜகவில் ஏ டீம் என்பதால்தான் எங்களை பி டீம் என்று கூறுகிறார்கள் என்றார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.