2024 வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள்... லிஸ்ட்ல இந்த படங்களும் இருக்கா?..
CineReporters Tamil December 23, 2024 01:48 AM

hit movies

hit movies

2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சூப்பர் ஹிட் அடித்த படங்களின் தொகுப்பை இந்த லிஸ்டில் நாம் தெரிந்து கொள்வோம். 2024 ஆம் ஆண்டு பல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. இதில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது, தோல்வியையும் சந்தித்தது. அப்படி 2024 ஆம் ஆண்டு ஹிட் கொடுத்த திரைப்படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

த கோட்: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் த கோட். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. படம் பாக்ஸ் ஆபிஸில் 456 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் முதலிடத்தில் இருக்கின்றது.


அமரன்: இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 320 கோடி ரூபாய் வசூல் செய்து 2வது இடத்தை பிடித்திருக்கின்றது.


வேட்டையன்: ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையன். படம் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 260 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.


மகாராஜா: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மகாராஜா. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 186 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது சைனா மற்றும் ஜப்பான் நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.


ராயன்: நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்த திரைப்படம் ராயன். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படம் 150 இல் இருந்து 160 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.

அரண்மனை 4: இயக்குனர் சுந்தர் சி இயக்கி தயாரித்து நடித்த திரைப்படம் அரண்மனை 4 இந்த திரைப்படம் வெறும் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியான திரைப்படங்களில் முதல் வெற்றியை பெற்றது அரண்மனை 4 திரைப்படம் தான்.

தங்கலான்: இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான். வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருந்தது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.