இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவை பயன்படுத்தாத நபர்கள் இல்லை என்றே கூறலாம். வினோதமான வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் ஒரு நபர் போக்குவரத்து மிகுந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்கிறார். ஆனால் அவர் விதிகளுக்கு புறம்பாகவும் பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திரும்பி நின்று கொண்டு வண்டி ஓட்டுகிறார்.
சாகசம் செய்யும் வகையில் அந்த நபர் சாலையை பார்க்காமல் திரும்பி நின்றபடி வாகனம் ஓட்டுவது ஆபத்தாக அமையும். ஆனால் அந்த நபர் அதனை கண்டு கொள்ளாமல் வாகனம் ஓட்டுகிறார். அந்த காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.