உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டி வருகின்றன. இயேசு பிறந்த தினத்தைக் கொண்டாட மக்கள் மகிழ்ச்சியுடன் தயாராகி வருகின்றனர். டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினம் என்றாலும் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே வீடுகளிலும், தேவாலங்களிலும் ஸ்டார் கட்டுவதில் துவங்கி, பாட்டுப்பாடுவது, அலங்கரிப்பது வரை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டி வருகிறது.
கிறிஸ்துமஸ் தாத்தாவும், கிறிஸ்துமஸ் மரமும் இல்லாமல் எப்படி கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடுவது? இனிப்பு இல்லாமல் பண்டிகையா? உங்கள் குடும்பத்தாரை வீட்டிலேயே சீஸ் பால் ட்ரீ செய்து அசத்துங்க. இனிப்புக்கு இனிப்பும் ஆச்சு... கூடவே அசத்தலான கிறிஸ்துமஸ் அலங்காரம்.
இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டிலேயே அசத்தலான ப்ளம் கேக், சீஸ் கேக், வெண்ணிலா கேக், ஸ்டாபெர்ரி கேக், சீஸ் பால் என விதவிதமான பலகாரங்களையும், கேக்குகளையும் செய்து குடும்பத்தாரை அசத்தலாம்.
பார்ப்பதற்கு கிறிஸ்துமஸ் மரம் போன்றே இருக்கும் இந்த சீஸ்பால் குழந்தைகளுகு மிகவும் பிடிக்கும். அந்த நிமிஷ அவர்களோட சந்தோஷத்தைப் பார்த்து நாமும் மகிழலாம். ட்ரை பண்ணலாம்.
கிறிஸ்துமஸ் சீஸ் பால் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
சீஸ் கிரிம் - 100 கிராம்
பூண்டு பவுடர் - 1 டீஸ்பூன்
வெங்காய பவுடர் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
வெங்காய தாள் - சிறிதளவு
பாதாம் - 100 கிராம்
மாதுளை - 1
செய்முறை:
கிறிஸ்துமஸ் மர வடிவிலான சீஸ் பால் ரெசிபி செய்வதற்கு சீஸ்களை நன்றாக உருண்டையாக திரட்டி பாயில் பேப்பரில் மர வடிவில் அமைத்துக் கொள்ளவும். பின்னர் இதை மைக்ரோஓவனில் வைத்து பேக் செய்துக் கொள்ள வேண்டும். இறுதியாக அதன் மேல் மாதுளைகளை வைத்து அலங்கரித்தால் போதும் கிறிஸ்துமஸ் சீஸ் பால் ரெடி. பாதாம் பருப்புகளை அதில் ஆங்காங்கே வைத்து அலங்கரித்தல் அசத்தல். இறுதியாக சீஸ்களைக் கொண்டு ஸ்டார் வடிவை உருவாக்கி கிறிஸ்துமஸ் மரத்தின் மீது ஸ்டார்களைப் போல வைத்தால் போதும். அசத்தலான கிறிஸ்துமஸ் ட்ரீ சீஸ் பால் ரெடி. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள். உங்கள் செல்போன்களும் செல்ஃபிகளால் நிறையும்.