நீதிமன்ற படுகொலை விவகாரம்.. காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!
Dinamaalai December 22, 2024 12:48 AM

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வழக்கு விசாரணைக்கு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கீழநத்தம் பகுதியை சேர்ந்த மாயாண்டி ஒரு வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருவதற்காக காத்திருந்தபோது, திடீரென 4 பேர் கொண்ட கும்பல் மாயாண்டியை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்திற்குள் ஓடி வந்து உயிரை காப்பாற்றிக்க முயற்சித்தார்.

இருப்பினும் அந்த கும்பல் மாயாண்டியை துரத்தியது. நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்தபோது, மாயாண்டியை அந்த கும்பல் சரமாரியாக சரமாரியாக வெட்டினர். இதில், மாயாண்டிக்கு முகம், கை, கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கை தானாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் முன் வந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் காவல்துறை மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்த போலீசார் குறித்து விசாரணை நடத்த நெல்லை போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.