தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கச்சத்தீவை காங்கிரஸ் இலங்கைக்கு தாரை வார்த்தபோது அதனை கருணாநிதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். கோவையில் குண்டு வெடிப்பு குற்றவாளியான பாஷாவின் இறுதி ஊர்வலமே தமிழகத்தில் காட்டாட்சி நடைபெறுகிறது என்பதற்கு சான்று. இந்த காவல்துறைக்கு வெட்கமோ அல்லது குற்ற உணர்வோ கிடையாது. இந்த அரசு இந்துக்களுக்கு விரோதமாகவும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் இருக்கிறது.
கடலில் மூழ்கும் கப்பலில் எலி இருக்காது என்பது ஆங்கில பழமொழி. திமுக போன்ற மூழ்குகின்ற கப்பலில் இருந்து திருமாவளவன் போன்ற எலிகள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. கூட்டணி தொடர்பாக அகில தலைமை தான் முடிவெடுக்கும் நிலையில் அது தொடர்பாக கருத்து சொல்ல மாநில தலைமைகளுக்கும் நிர்வாகிகளுக்கும் உரிமை உண்டு. மேலும் இனி மேலும் பொது மக்களை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிகள் ஏமாற்ற முடியாது என்று கூறினார்.