தமிழ் சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தவர் கோதண்டராமன். இவர் கடந்த 25 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கலகலப்பு என்ற திரைப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இவருக்கு தற்போது 65 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக சென்னை பெரம்பூரில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். மேலும் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.