கடந்த 2018ல் திருச்சி விமான நிலையத்தில் சீமான் சென்றிருந்த போது நாம் தமிழர் கட்சியினருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை (மதிமுக) சேர்ந்த கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இந்த மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மோதல் வழக்கு குறித்த விசாரணைக்காக இன்று காலை திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி மாதம் 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.