சாம்பியன்ஸ் டிராபி... இந்தியா கலந்துக் கொள்ளும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது... முடிவுக்கு வந்த பஞ்சாயத்து!
Dinamaalai December 20, 2024 01:48 AM

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடக்க இருப்பதாகத் தெரிகிறது.  8 அணிகள் கலந்து கொள்ளும்  இந்த தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்தது.ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை கூட இதுவரை வெளியிடப்படவில்லை எனத் தெரிகிறது. இதற்கு பிசிசிஐயின் எதிர்ப்பு காரணமாக அமைந்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பிரச்சனையே இதற்கு மிகப்பெரிய காரணம்.


பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. ஹைப்ரிட் மாடலின் கீழ் இந்த போட்டியை நடத்த ஐசிசி நடவடிக்கை எடுத்தது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தானில் விளையாடுவதற்குப் பதில் வேறு ஏதேனும் நாட்டில் விளையாடும்.

இதற்கு முதலில் சம்மதிக்காத பாகிஸ்தான், ஐசிசியின் கடுமையான அணுகுமுறைக்குப் பிறகு ஒப்புக்கொண்டது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என ஐசிசி அறிவித்துள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.