நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் அருகே உள்ள பகுதியில் நாகராஜனின் மகன் விக்னேஷ்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பட்டதாரி. இவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு, ஜமைக்கா உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்காக சேர்ந்துள்ளார். இன்னிலையில் நேற்று முன்தினம் அந்த சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. அதில் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின் அவரது உறவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை பத்திரமாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தினர்.
அதன்படி கலெக்டர் தலைமையில் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை ஆய்வு செய்த காவல்துறையினர் கொள்ளை கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீடியோவில் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் முகமூடி அணிந்து சூப்பர் மார்க்கெட்டில் புகுந்ததும். அதன் பின் அங்கு இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, கடை ஊழியர்களில் ஒருவரை காலிலும், மற்றொருவர் இடுப்பிலும் சுட்டனர். இந்த தாக்குதலில் விக்னேஷ் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.