தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் நிறைவுக்கு வர அடுத்த நாட்களில் நிறைய திருப்பங்களுடன் தான் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் 75 நாட்களை பிக் பாஸ் நிகழ்ச்சி 8 வது சீசன் தொட்டிருந்த நிலையில் இனி வரும் நாட்கள் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது வெளியேறாமல் வீட்டிலேயே இருப்பதற்கு மிக சரியான வியூகங்களுடன் களமிறங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது கேமை நேர்த்தியாகவோ அல்லது சற்று தந்திரத்துடனும் விளையாடி வரும் சூழலில் சமீபத்தில் நடந்திருந்த பிரச்சனை ஒன்றே மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. சமீபத்தில் நடந்த கேப்டன்சி டாஸ்கில் பவித்ராவை எதிர்த்து ஆடிய முத்துக்குமரன், இறுதி சுற்றில் வேண்டுமென்றே தோற்றதாக தெரியும் நிலையில் பிக் பாஸ் விதிப்படி அது தவறான விஷயம்.
முத்துக்குமரன் சொன்னது உண்மையா..
ஒருவர் வேண்டுமென்றே விட்டுக் கொடுக்காமல் விளையாட வேண்டும் என பிக் பாஸ் பலமுறை அறிவுறுத்தியுள்ள சூழலில் பவித்ரா கேப்டனாக கூடாது என்ற நோக்கிலும் முத்துக்குமரன் இதை செய்திருக்கலாம் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர். தான் வெற்றி பெற்றதும் உடனடியாக முத்துக்குமரனிடம் பேசும் பவித்ரா வேண்டுமென்று எனக்காக விட்டுக் கொடுத்தீர்களா என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
ஆனால் முத்துக்குமரனும் நான் எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் எதேச்சையாக தான் அது நடந்தது என்று கூற பார்வையாளர்கள் இதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. அந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் முத்துக்குமரன் வேண்டுமென்றே தான் பந்தை விட்டார் என்பது தெரியும் நிலையில் பிக் பாஸ் விதியை வேண்டுமென்றே மீறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் என்றும் அவருக்கு எதிரான கருத்துக்கள் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
உடைந்து போன பவித்ரா..
முத்துவால் கடுப்பான பிக் பாஸ், ‘வேண்டுமென்றே இப்படி விளையாடக்கூடாது என பலமுறை சொல்லியும் நீங்கள் யாரும் கேட்கவில்லை என்றும் இனிமேல் கேப்டன்சி டாஸ்க் இந்த வாரம் ரத்து செய்யப்படுகிறது என்றும் கூறிவிட்டார். இதனால் கண்ணீர் வடிக்கும் முத்துக்குமரன் தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் பலமுறை மன்னிப்பு கேட்டும் பிக் பாஸ் இதை ஏற்றுக் கொள்ள நிலையில் இல்லை என்றே தெரிகிறது.
மேலும் தான் கேப்டனாகும் வாய்ப்புகள் இருந்ததால் பவித்ராவும் கண்ணீர் வடிக்க முத்துவுக்கு எதிரான கருத்துகள் தான் சமூக வலைதளங்களில் அதிகமாக உள்ளது. தான் வேண்டுமென்று இதை செய்யவில்லை என பலமுறை முத்துக்குமரன் கூறினாலும் அவரது செயல்பாடு அப்படி இல்லை என்றும் தெரிகிறது. இதனால் பவித்ராவின் நிலையை இன்னும் மோசமாக்கவே தனது தந்திரங்களுடன் முத்துக்குமரன் செயல்பட்திருக்கலாம் என்பதும் பலரது கருத்தாக உள்ளது.
அதே நேரத்தில் முத்து சொல்வதை வீட்டில் இருக்கும் பலரும் நம்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் முத்துக்குமரன் தெரியாமல் கூட பந்தை விட்டிருக்கலாம் என்றும் அவருக்கு ஆதரவான கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.