பாஷா அப்பா… ஓட்டு பிச்சை எடுக்க சீமான் கிட்ட தான் கத்துக்கணும்… இப்படி சொல்ல வெட்கமா இல்லையா….? கிழித்தெரிந்த அண்ணாமலை…!!
SeithiSolai Tamil December 21, 2024 04:48 AM

கோவை குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி பாஷா ஆண்மையில் காலமானார். இவருடைய இறுதிச் சடங்குக்கு காவல்துறை மறைமுகமாக அனுமதி கொடுத்துள்ளதாக கருதி இன்று அண்ணாமலை தலைமையில் கோவையில் கருப்பு தின பேரணி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை சீமானை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, கோவை குண்டுவெடிப்பில் இறந்து போன 50 பேருக்கு அப்பா இல்லையா.? ஓட்டு பிச்சை எப்படி எடுக்க வேண்டும் என்பதை உங்ககிட்ட தான் கத்துக்கணும். நான் வயிறு எரிஞ்சு முன்னாள் காவல்துறையா காக்கி சட்டை போட்ட கம்பீரத்தில் இதை சொல்கிறேன். காவல்துறை நல்ல வேலை பார்க்குறீங்க. கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த குபியனின் முதல் இலக்கு துணிக்கடை. இரண்டாவது இலக்கு மாநகர காவல் அலுவலகம்.

மொத்தம் 7 இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், முதலில் நாங்க செத்திருக்க மாட்டோம் நீங்க தான் செத்து இருப்பீங்க. முபீர் பதிவு செய்த 7 நிமிட வீடியோ விரைவில் வெளியாகும். இந்த வழக்கில் தேசியப் புறனாய்வு துறை 18 பேரை கைது செய்தது. 4 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கோவையில் விரைவில் என்ஐஏ அலுவலகம் திறக்க வேண்டும் என்று கேட்டுநிலையில் அமித்ஷா கண்டிப்பாக இது விரைவில் நடக்கும் என்று உறுதி கொடுத்துள்ளார். கோவிலில் வெடித்த குண்டுவெடிப்பில் 50 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அப்பா இல்லையா. 200 பேர் படுகாயம். அவர்களுக்கு கை இல்லை காலில்லை. அவர்களுக்கு அப்பா இல்லை. ஆனா பாஷா உங்களுக்கு அப்பாவா.? மேலும் இந்த அருமையான ஊர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.