திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்… ஏன் தெரியுமா..? இந்திய முன்னாள் வீரர் சொன்ன காரணம்… நீங்களே பாருங்க..!!
SeithiSolai Tamil December 21, 2024 04:48 AM

இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டை வீழ்த்திய 2ஆவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து பல கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஹர்பஜன் சிங் அஸ்வினின் ஓய்வு குறித்து கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். இதில் அவர் கூறியதாவது, தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அஸ்வின் இவ்வாறு முடிவு எடுத்தது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிட்னி அல்லது மெல்போனில் அஸ்வின் விளையாடுவார் என நான் எதிர்பார்த்தேன். ஏனெனில் அங்கு ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இருந்தாலும் அஸ்வினின் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும். நன்கு சிந்தனை செய்த பின்னரே அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என நம்புகிறேன். மிகப் பெரிய பந்துவீச்சாளரான அவருக்கு எனது வாழ்த்துக்கள். போட்டியில் வெற்றி பந்துவீச்சாளரான அவர் இந்தியாவிற்கு நிறைய வெற்றிகளை கொடுத்துள்ளார். அவருடைய வருங்கால வாழ்விற்கு வாழ்த்துக்கள். எனக்குத் தெரிந்தவரை இந்தியா அடுத்து 2025 இல் தான் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது.

இதற்கு முன் 5 போட்டிகள் இங்கிலாந்தில் தான் நடைபெறும். இவ்வளவு சிறப்பாக விளையாடும் நீங்கள் இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. தன்னுடைய இடத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என அஸ்வின் கருதி இருக்கலாம். இங்கிலாந்து தொடர் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 2 ஸ்பின்னர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட இருந்தனர். இதுபோன்ற சூழல்தான் அஸ்வின் மனதில் இந்த முடிவை எடுக்க வைத்திருக்கும் என நான் எண்ணுகிறேன். இருந்தாலும், அவருக்கு இந்த முடிவு அவ்வளவு எளிதாக இருக்கும் என சொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.