தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு கொட்டுகாளி மற்றும் கருடன் ஆகிய திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். தற்போது விடுதலை 2 திரைப்படத்தில் சூரி நடித்துள்ள நிலையில் நேற்று அந்த படம் வெளியான நிலையில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளியான நிலையில் நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விடுதலை 2 படம் எல்லோருக்கும் பிடித்த வெற்றி படமாக அமைந்த நிலையில் கண்டிப்பாக விடுதலை 2 திரைப்படமும் அனைவருக்கும் பிடிக்கும்.
இந்த படம் திருப்திகரமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இருக்கிறது. இந்த படம் எதார்த்தமாகவும் வாழ்க்கைக்கு நெருக்கமாகவும் இருப்பதால் கண்டிப்பாக படத்தை பற்றி அனைவராலும் புரிந்து கொள்ள முடியும் என்றார். இந்த படம் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக தாக்கம் இருக்கும் என்று கூறினார். இந்நிலையில் நடிகர் சூரி பேசிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ரசிகர்கள் அடுத்த தளபதி அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கோஷமிட்டனர். மேலும் அவர்களை பார்த்து நடிகர் சூரி கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் டா தம்பி. நான் உங்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன் என்று சிரித்தபடியே கூறினார்.