இபிஎஸ் பாஜகவிற்கு எதிராக குரல் கொடுக்க நடுங்குகிறார்... தயாநிதி மாறன் தடாலடி பதில்!
Dinamaalai December 21, 2024 05:48 PM

 

 
அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் சர்ச்சை பேச்சுக்கு  நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் பெரும் அதிர்வலைகளை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தியுள்ளனர்.இபிஎஸ்  திமுக குறித்து பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அவருடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.  அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின்  ”  இபிஎஸ் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்லாமல் மாநில அரசை குறை சொல்கிறார்.

அதைப்போல, கவுண்டமணி – செந்தில் வாழைப்பழ காமெடி போல் சட்டமன்றத்தில் சொன்னதையே திரும்பத் திரும்ப பேசினார்.அதிமுக ஒன்றிய அரசை நோக்கி கீச்சுக்  குரலில் கூட பேச முடியவில்லை. இந்த நிலையில்தான் இருக்கிறது” என பேசியிருந்தார்.அவரை தொடர்ந்து  திமுக எம்.பி. தயாநிதி மாறன்  “புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி இழிவாகப் பேசிய அமித்ஷா பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு பயந்துகொண்டே மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு போராட்டங்கள் நடந்து கொண்டு தான்  இருக்கிறது. இதற்கு ஏற்கனவே, ஜெயக்குமார் அவர்கள் பதிலளித்து விட்டார்கள்.

எனவே, அவருடைய பதிலை என்னுடைய பதிலாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார். கேட்ட கேள்விக்கு நேராக சொல்ல பயம் இருக்கிறது இதன் மூலமே தெரிகிறது. அமித்ஷாவிற்கு எதிராக பேச இபிஎஸ் நடுங்குகிறார். இதன் மூலமே பாஜக – அதிமுக கூட்டணி உறுதி என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்லாமலே சொல்லிவிட்டார். தமிழ்நாட்டுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக யார் செயல்பட்டாலும் அதனை தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்ககூடிய ஒரே கட்சி திமுக தான்” என தடாலடியாக  தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.