தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் முன்னாள் எம்எல்ஏவும் பாஜக கட்சி நிர்வாகியுமான விஜயதரணி ராகுல் காந்தி கூறியதால் தான் விஜய் கட்சி ஆரம்பித்ததாக கூறினார். அதாவது பல வருடங்களுக்கு முன்பாக விஜய் ராகுல் காந்தியை டெல்லியில் சென்று சந்தித்ததாகவும் அப்போது கட்சியில் இளைஞர் அணி போன்று ஏதாவது பொறுப்பு வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் விஜய் கேட்டதாகவும் அதற்கு ராகுல் உங்களுக்கு இருக்கும் செல்வாக்குக்கு நீங்கள் தனியாகவே கட்சி ஆரம்பிக்கலாம் என்று கூறியதாகவும் கூறினார். இதன் காரணமாக ராகுல் சொல்லி தான் விஜய் கட்சி ஆரம்பித்ததாகவும் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.
இந்த விவகாரம் அப்போது பேசும் பொருளாக மாறிய நிலையில் தற்போது விஜயதரணி விஜய் பற்றி பேசியுள்ளார். அதாவது நேற்று செய்தியாளர்களை சந்தித்து விஜய தரணி, நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் சரியான கூட்டணி அமைக்க வேண்டும். விஜயை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் சில அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் மற்றும் சரியான கூட்டணி அமைத்தால் கண்டிப்பாக அவர் ஆட்சியில் அமரலாம். ஒருவேளை அவரால் சரியான முறையில் கூட்டணி அமைக்க முடியாவிடில் பிற கட்சிகளைப் போன்று வாக்குகளை பிரிக்கும் ஒரு கட்சியாக தான் விஜயின் கட்சியும் இருக்கும் என்று கூறினார். மேலும் 2026 தேர்தலில் பலமுனை போட்டி நிலவும் என்றும் கூறினார்.