சென்னையில் பயங்கரம்… ரயில்வே ஸ்டேஷனில் மூதாட்டி கொடூர கொலை… 2 கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி கைது..!!!
SeithiSolai Tamil December 21, 2024 06:48 PM

சென்னையில் சைதாப்பேட்டை ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் ரயில்வே நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த மூதாட்டியை இரண்டு கால்களையும் இழந்த முத்து என்ற மாற்றுத்திறனாளி கொலை செய்துள்ளார்.

இவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மூதாட்டியின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அந்த மூதாட்டியை அவர் கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.