தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை... டெல்டா வெதர்மேன் அலெர்ட்!
Dinamaalai December 21, 2024 06:48 PM

 காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில்  தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும்   காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக தெரிகிறது.  

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்திருந்தது.இது குறித்து  டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்  ” மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை, இது அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு மத்திய வளைகுடாவில் நின்று கொண்டே இருக்கும். பின்னர் வறண்ட காற்றினால் பாதிக்கப்பட்டு காலியான ஓட்டுடன் மீண்டும் தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.விரிவான அப்டேட் விரைவில் வெளியாகும்” என பதிவிட்டுள்ளார்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.