நெல்லையில் சோகம் - கழிவு நீர் தொட்டியில் விழுந்து திமுக நிர்வாகி உயிரிழப்பு.!
Seithipunal Tamil December 21, 2024 06:48 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் அங்குள்ள பாத்திர கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் முருகன் என்பவர் நேற்று முன்தினம் இரவு கடையில் வழக்கம் போல் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

பேருந்து நிலையம் அருகே வந்தபோது, புதிதாக கட்டிடப் பணிகள் நடந்து வரும் பேருந்து நிலைய கழிவுநீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். அந்த பகுதி இரவு நேரம் என்பதாலும், ஆட்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டதாலும் யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் முருகன், கழிவுநீர் தொட்டியில் கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து முருகனை மீட்டு பார்த்தபோது அவர் பரிதாபமாக இறந்து கிடப்பது தெரியவந்தது. 

உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், முதல்கட்டமாக இறந்துபோன முருகன், தி.மு.க.வில் வள்ளியூர் நகர பொருளாளராக இருந்தார் என்பது தெரிய வந்தது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.