பாப்கார்னுக்கு 18% வரை வரி - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு!
Top Tamil News December 22, 2024 12:48 AM

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பாப்கார்னுக்கு 18% வரை வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 55வது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதாவது பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை புதிதாக விதித்தும், இதேபோல் சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை உயர்த்தியும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பாப்கார்னுக்கு 18% வரை வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பேக்கேஜ் செய்யப்படாத உப்பு மற்றும் பெப்பர் பாப்கார்னுக்கு 5% வரியும், பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிளிடப்பட்ட பாப்கார்னுக்கு 12% வரியும், கேரமல் வகை பாப்கார்னுக்கு 18% வரியும் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%-ல் இருந்து 18%ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.