அமித் ஷாவை கண்டித்து திருத்தணியில் விசிக-வினர் ரயில் மறியல் போராட்டம்
Top Tamil News December 22, 2024 12:48 AM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாடாளுமன்றத்தில்’ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள். அதற்கு பதிலாக கடவுளின் பெயரை சொன்னால் கூட சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணியில் ரயிலை மறித்து, எஞ்சின் மேல் ஏறி நின்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.