“உடல்நலம் பாதித்த மனைவியை கவனிக்க விருப்ப ஓய்வு”.. அதே நாளில் கணவன் கண்முன்னே சரிந்து விழுந்து மரணம்… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!
SeithiSolai Tamil December 26, 2024 04:48 PM

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் மத்தியக்கிடங்கு நிறுவனத்தில் மேலாளராக தேவேந்திர சாண்டல் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பணியில் இருந்து ஓய்வு பெற இன்னும் 3 வருடங்கள் இருக்கும் நிலையில் அவருடைய மனைவியை கவனித்துக் கொள்ள முன்கூட்டியே ஓய்வு பெற்றுக்கொண்டார். இவருடைய மனைவி டீனாவுக்கு இருதயம் தொடர்பான பிரச்சனை இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் முன்கூட்டியே ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு வழியனுப்பு விழா வீட்டில் நடைபெற்றது. அப்போது அவரும் அவருடைய மனைவி மாலை அணிந்திருந்த நிலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் கேக் வேண்டி கொண்டாடிய நிலையில் பின்னர் இருவரையும் புகைப்படம் எடுப்பதற்காக எழுந்து நிற்கும்படி உறவினர்கள் கூற டீனா சற்று சிரமமாக இருக்கிறது என்றார். அதன் பிறகு மயக்கம் வரும்படி இருக்கிறது என்று அவர் கூற அங்கிருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வர சென்றனர். அதன்பிறகு சிலர் டீனாவை போட்டோ எடுக்க சிரிக்கும்படி கூறினர். ஆனால் அவர் முடியாமல் மேஜையில் மயங்கி விழுந்துவிட்டார். உடனடியாக கணவரும் உறவினர்களும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மேலும் தன்னுடைய உடல் நலம் பாதித்த மனைவியை கவனித்துக் கொள்ள கணவன் முன்கூட்டியே ஓய்வு பெற்ற நிலையிலும் ஓய்வு நாளில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.