ஆஸ்திரேலியா, இந்திய இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதுவரை ஆஸ்திரேலிய அணி 9 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்து விளையாடிவருகின்றனர். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியுள்ளது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்யது வருகிறது. அதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்,உஸ்மான் கவாஜா
சாம் கான்ஸ்டாஸ்,ஆகியோர் தொடக்கவீரர்களாக களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போதுவரை ஆஸ்திரேலிய அணி 9 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்து விளையாடிவருகின்றனர். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார். சுப்மன் கில் கழற்றிவிடப்பட்டுள்ளார். ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக மீண்டும் களமிறங்க உள்ளார். இதனால் கடந்த போட்டிகளில் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல். ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளார்.