பிரபல இயக்குனர் எஸ்.டி.சபா. இவருக்கு 61 வயது ஆகும் நிலையில் உடல் நல குறைவினால் காலமானார். இவர் பிரபல நடிகர் விஜயகாந்த் நடித்த பரதன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு எங்க தம்பி, சுந்தர புருஷன், விஐபி, புன்னகை பூவே, அஆஇஈ, நாம், பதினாறு வருடம் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். இவர் தெலுங்கில் பந்தம் கன்னடத்தில் ஜாலிபாய் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.
மேலும் இவர் உடல் நலக்குறைவினால் நேற்று திண்டிவனத்தில் காலமானார். மேலும் இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.