Bigg Boss Tamil Season 8 Day 81 இல் Freeze டாஸ்க் இன் இறுதி நாளில் முதலாவதாக ஜெஃப்ரின் அம்மா அப்பா வந்தார்கள். அவர்கள் வந்து அனைவரிடம் ஜெப்ரி வந்து நடிக்கல எல்லா பக்கமும் இப்படித்தான் இருப்பான். எல்லாத்தையும் நல்லா சகஜமாக பழக கூடியவன் அப்படின்னு பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அடுத்ததாக அருணின் அப்பா அம்மா வந்தார்கள். ஆனால் அருணுக்கு மட்டும் பிக் பாஸ் Prank செய்து விட்டார். அது என்னவென்றால் அருணை Confession ரூமுக்கு கூப்பிட்டு சில காரணங்களால் உங்கள் வீட்டில் இருந்து யாரும் வர முடியவில்லை என்று கூறியிருக்கிறார்கள் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்கள் வீடியோ காலில் உங்களிடம் இணைவார்கள் என்று கூறிவிட்டார்.
இதனால் அருண் கலங்கி போய்விட்டார். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை ஓகே என்று சொல்லிக் கொண்டிருந்தார். அருண் Confession ரூமில் இருக்கும்போது வீட்டுக்குள்ளே அருண் அப்பாவும் அம்மா வந்து விட்டார்கள். அவர் வெளியே வந்த உடனே மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆகிவிட்டார். அருணின் அப்பா அருணிடம் கலங்காத நீ கரெக்டா தான் விளையாடிட்டு இருக்க. காஞ்ச மரம் தான் அடிபடும் அதை போல நீ ஸ்ட்ராங்கான பிளேயர் அதனால உன்னை எல்லாரும் கார்னர் பண்றாங்க என்று கூறி அவரை நன்றாக தேற்றி விட்டார்.
அடுத்ததாக அவர் முரண்பாடாக சொன்னது மஞ்சரி பொம்மை டாக்கில் அருண் பொம்மையின் கழுத்தை நெரிச்சிடுவேன் சொன்னது ஒரு விளையாட்டுல சொன்ன விஷயம் அதை பெருசா எடுத்துக்கிட்டீங்க என்று கூறினார். அடுத்ததாக முத்துக்குமரன் ஏதாவது செஞ்சுட்டு போயிடலாம் போல இருக்கு அப்படின்னு அருணை பார்த்து சொன்னது வருத்தமாக இருந்தது என்று கூறினார்கள்.
அடுத்தது ஜாக்லின் வீட்டிலிருந்து அவங்க அம்மா மற்றும் நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். ஜாக்லின் அம்மா எல்லோரிடம் அன்பாகவும் பாசமாகவும் பேசினார்கள். அவருடைய பிரண்டு தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள் ஜாக்லின் எப்பவுமே நேரா பேசக்கூடியவர். பின்னாடி பேசத் தெரியாது அதே மாதிரி எதுனாலுமே அவ முன்னாடி சொல்லுங்க என்று கூறினார்கள்.
இறுதியாக முத்துக்குமரன் அப்பா அம்மா வந்தார்கள். இந்த டாஸ்கிளியே இவர்கள் வந்தது தான் பார்ப்பதற்கு மிகவும் எமோஷனலாக இருந்தது. ஏனென்றால் மற்ற போட்டியாளர்கள் ஓரளவு பிரபலமானவர்கள் ஆனால் முத்துக்குமரன் தான் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். அவர்கள் அம்மாவும் அதே போல் தான் இருந்தார்கள். வந்தவுடன் முத்துக்குமரனின் அம்மா முத்துக்குமரனை கட்டிப்பிடித்து வெகு நேரம் கதறி அழுதார். அது பார்ப்பவர் கண்ணிலே கண்ணீர் வரவழைத்து விட்டது என்று சொல்லலாம்.
கிராமத்து பின்னணியில் வரும் தாய் தன் மகனைப் பற்றி எப்படி எல்லாம் பேசுவாரோ அதேபோல் அப்படியே முத்துக்குமரனின் அம்மா பேசினார். இருவரும் வந்து சென்றது மிகவும் எமோஷனலாக இருந்தது. இந்த Freeze டாஸ்க் ஒரு வழியாக முடிந்து விட்டது. இனி அடுத்ததாக வெள்ளிக்கிழமை வேறு சில போட்டியாளர்களின் நண்பர்கள் போன்று சிலர் வர இருக்கிறர்கள் என்று கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.