முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 92 வயதான மன்மோகன் சிங், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
33 ஆண்டுகளுக்கு முன்பு, 1991ல், ராஜ்யசபாவில் தனது அரசியல் இன்னிங்ஸைத் தொடங்கிய மன்மோகன் சிங், பி.வி.நரசிம்மராவ் அரசின் கீழ் மத்திய நிதி அமைச்சராக பதவியேற்றார். 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.