இந்திய சினிமாவில் பிரபலமான ஒரு நடிகராக இருப்பவர் சோனு சூட். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்டா பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கொரோனா காலகட்டத்தின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவினார். இதேபோன்று பலருக்கும் தன்னால் முடிந்த அளவுக்கு அவர் உதவிகளை செய்து வருகிறார். அவர் அரசியலுக்கு வருவதற்காக தான் இப்படி உதவிகள் செய்வதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக தற்போது நடிகர் சோனு சூட் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு முதல்வர் பதவி மற்றும் துணை முதல்வர் பதவி தேடி வந்தது. அதன் பிறகு ராஜ்யசபாவில் சீட் தருகிறோம். டெல்லியில் அரசு வீடு, பாதுகாப்பு மற்றும் அரசு முத்திரை என்று பலர் என்னை தேடி வந்தனர். ஆனால் அவற்றையெல்லாம் நான் வேண்டாம் என்று உதவி தள்ளி விட்டேன். மேலும் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு தான் வரவேண்டும் என்று அவசியம் கிடையாது என்று கூறினார்.