கார்த்திக்கின் திட்டம்… காதலை சொன்ன அன்பு… ஆதிரையின் சபதம்… நந்தினியின் கோபம்…
CineReporters Tamil December 27, 2024 05:48 PM

சன் சீரியல்கள்

சன் சீரியல்கள்

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி டாப் 4 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் புரோமோ தொகுப்புகள்.

சிங்கப் பெண்ணே

’சொல்லுடா நீ யாரை லவ் பண்ற’ என அன்புவின் அம்மா அவரிடம் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். எல்லோரும் தடுக்க ’இங்க பாருங்க யாரும் இந்த விஷயத்துல தலையிடாதீங்க’ என்கிறார். ஆனந்தியும் அவரை தடுக்க பார்க்க, ’நீ யாரு என் குடும்ப விஷயத்துல தலையிட. வெளியே போ’ என்கிறார் அன்புவின் அம்மா.

அன்பு, ’அவ போக மாட்டா. ஏன்னா நான் அவ்வளவுதான் லவ் பண்றேன்’ என்கிறார். அன்புவின் மாமா ’சின்னஞ்சிறுசுங்க நல்லா இருந்துட்டு போகட்டுமே’ எனக் கூற அன்புவின் அம்மா சில விஷயங்களை கூறுகிறார்.

அன்னம்

சரவணன் அன்னத்திடம் ’எனக்கு எதுக்கு நீ இதெல்லாம் பண்ற’ என கேட்கிறார். அதற்கு அன்னம், ’நீங்க என் மாமா மகன். நீங்க நடந்து போனா’ என் மாமனுக்கு தான் அசிங்கம் என்கிறார்.

கார்த்திக் ரம்யாவிடம், ’அன்னம் மனசுல சரவணன் எப்படி ஹீரோ ஆனானோ? அதுபோல, சரவணன் மனசுலையும் அண்ணன் ஹீரோயின் ஆகணும்’ என பேசிக் கொண்டிருக்கிறார். அன்னம் வீட்டில் குணாவை வீட்டிற்கு அழைத்து வரும் அவர் அப்பா, ’மாப்பிள லாட்ஜுக்கு 2000 கொடுக்கிறார். வீட்டில் ஆயிரம் கொடுங்கள்’ என தான் அழைத்து வந்ததாக கூறுகிறார்.

மருமகள்

ஆதிரையை வீட்டிற்கு அழைக்கிறார் அவருடைய மாமனார். ஆதிரை, ‘ பணத்தை ரெடி செய்யாமல் தான் வீட்டிற்கு வரமாட்டேன் மாமா’ என்கிறார். சித்தப்பா வீட்டில் பைனான்சியரிடம் ’பணம் கொடுக்கலைன்னா அவன் பொண்டாட்டிய தூக்குவேனு சொல்லி இருக்க செய்யாம விட்றாத’ என்கிறார்.

பைனான்சியர், அதை எப்படி மறப்பேன். சிறப்பா செஞ்சிடுவேன் என்கிறார். இதை சித்தி பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஆதிரை அப்பா, மனோகரியிடம், இவங்க மூணு பேரையும் நான் சமமா தான் பார்க்கிறேன். ஆனா நீ ஆதிரையை உன் பொண்ணா பார்த்ததே இல்லை’ என்கிறார்.

மூன்று முடிச்சு

நந்தினி அருணாச்சலத்திடம், ’நான் போய் எப்படி சம்மதம் இல்லாமல் கையெழுத்து போடுவது’ என்கிறார். ’அதெல்லாம் போடலாமா நீயும் இந்த வீட்ல ஒரு ஆளு தானே’ என்கிறார்.

அருணாச்சலம் சுந்தரவள்ளியிடம், ’நீ ஒரு பக்கம் போகணும் நான் ஒரு பக்கம் போகணும்’ என்கிறார். சுந்தரவள்ளி, ’எந்த பக்கம்’ எனக் கேட்க, ’ரிஜிஸ்டர் ஆபீஸ்’ என உளறி விடுகிறார்.

சூர்யா நந்தினியிடம், நான் கேள்விப்பட்டிருக்கேன். ’நீ அந்த பூவை வாங்கி வச்சுக்கோ’ என்கிறார். ’நீங்கள் எப்படி எல்லாம் பண்ண மாட்டீங்களே’ என நந்தினி கேட்க சூர்யா முழித்துக் கொண்டிருக்கிறார்.


Also Read:

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.