IND vs AUS: விராட் கோலியின் கவனக்குறைவு… 82 ரன்னில் அவுட் ஆனார் ஜெய்ஸ்வால்…!!
SeithiSolai Tamil December 27, 2024 10:48 PM

இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் 3 போட்டிகள் முடிந்த நிலையில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. 3வது போட்டியில் மேட்ச் டிராவானது. இந்நிலையில் வெற்றியை நிர்ணயிக்க போகும், அடுத்த போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள், லபுசனே 72 ரன்கள், சாம் கான்ஸ்டாஸ் 60 ரன்கள் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்துள்ளது. அதன் பிறகு விளையாடிய இந்தியா அணி முதலில் ரோஹித் சர்மா களம் இறங்கினார், அவர் 3 ரன்னில் வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு களம் இறங்கிய கே எல் ராகுல் 24 ரன்னில் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு களமிறங்கிய கோலி மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் பவுலர்களை டாமினேட் செய்ய ரன்களை வேகமாக எடுத்தனர். எந்த ஒரு பவுலரும் அவருடைய ஆட்டத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் 40 ஆவது ஓவரில் போலண்ட் வீசிய கடைசி பாலில், லெக் சைடில் தட்டி விட்டு ரன்னுக்கு வந்த ஜெய்ஸ்வாலை பார்க்காத கோலி பந்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.

இதனால் அவுடாகி 82 ரன்னில் அவர் வெளியேற்றப்பட்டார். ஆனால் எதிர்பாராத இந்த நிகழ்வு இந்தியாவின் இன்னிங்ஸை புரட்டி போட்டது. அதன் பிறகு அடுத்த ஓவரிலே கோலி அவுட் ஆனார். அதன் பிறகு ஆகாஷ் தீப் டக் அவுட்டில் வந்த வேகத்தில் வெளியேறினார். 5 ஓவரில் 3 விக்கட்டுகளை இழந்துள்ள இந்தியா, 2ம் நாள் ஆட்ட நேரம் முடிவு 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.