விஜயகாந்தின் நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் காவல்துறை பேரணிக்கு அனுமதி தர மறுப்பு தெரிவித்துள்ளது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு இருந்து நினைவிடம் வரை பேரணி நடத்த தேமுதிக திட்டமிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.