விஜயகாந்த் நினைவிடத்திற்கு பேரணி.. அனுமதி மறுத்த காவல்துறை! - தேமுதிகவின் அடுத்த மூவ்!
Webdunia Tamil December 28, 2024 03:48 PM

இன்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் தேமுதிகவினர் பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவையொட்டி பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்த நிலையில் அவரது உடல் அரசு மரியாதையோடு கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டத்

இன்று அவரது முதலாவது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில், அவரது மறைவு நாளை குருபூஜையாக கொண்டாட தேமுதிக முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, த வெ க தலைவர் விஜய் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:

மேலும் இன்று விஜயகாந்த் நினைவு நாளில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணி செல்ல தேமுதிக திட்டமிட்டிருந்த நிலையில் காவல்துறை இதற்கு அனுமதி மறுத்துள்ளது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக தடையை மீறி பேரணியை நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.