உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஜெய் வீர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் காஜல் சிங் (17) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி நேற்றி வீட்டில் படிக்காமல் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். இதனால் கோபத்தில் தன் மகளை தந்தை பள்ளியின் இறுதி ஆண்டு நெருங்கி வரும் வேலையில் இப்படி படிக்காமல் தூங்குவதா என்று கண்டித்துள்ளார்.
அவர் திட்டியதால் காஜல் கோபம் அடைந்தார். பின்னர் வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த ஜெய்வீர் சிங் தன் மகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.