அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 55 வயதான ரோஸ் அண்ட்ரசன் என்ற பெண் தனது 7 வயது மகளை நாய் கூண்டில் அடைத்து கிறிஸ்துமஸ் மரத்திற்கு அடியில் வைத்துள்ளார். மேலும் சிறுமிக்கு உணவு, தண்ணீர் கொடுக்காததோடு கழிவறையை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளார். அதுமட்டுமின்றி கூண்டில் அடைத்த சிறுமையை கடுமையாக தாக்கவும் செய்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த அதிகாரிகள் சிறுமியை மீட்டதோடு ரோஸ் அண்ட்ரசனை கைது செய்தனர். ஆனால் அவரோ தான் செய்தது தவறு என்று ஒப்புக் கொள்ளாமல் பள்ளியில் சிறுமி செய்த தவறுக்காக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தான் இத்தகைய செயல் என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியை பராமரிப்பு இல்லத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.