சென்னையில் சர்வதேச சந்தையில் ஆபரணத்தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் தொடக்கத்தில் ரூ.57,120-க்கு விற்பனையான சவரன் விலை வார இறுதியில் ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த வார தொடக்க நாளான திங்கட்கிழமையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,800க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.56,720க்கும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.56,800க்கும், நேற்றுமுன்தினம் ஒரு சவரன் ரூ.57000க்கும், நேற்று சவரன் ரூ.57,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ15 குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7135க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ 100 க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.