புத்தாண்டில் வரும் குட் நியூஸ்… மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..? வெளியான சூப்பர் தகவல்..!!
SeithiSolai Tamil December 29, 2024 03:48 PM

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு அகவிலை படியை உயர்த்தும்போது மாநில அரசுகளும் அகவிலை படியை உயர்த்துகிறது. சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

இதனால் 53% வரை அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடம் அகவிலைப்படி உயர்வு எப்போது வெளியாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்த படலாம் என்று கூறப்படுவதால் 56 சதவீதம் வரை அகவிலை படியை ஊழியர்கள் பெறுவார்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் அடுத்ததாக புத்தாண்டு வருவதால் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். மேலும் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு தரவுகளின் அடிப்படையில் அமைவதால் அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.