இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தாவது, "நான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது விட்டேன் என்றால், அவரை அழைத்து வந்து நிறுத்துங்கள்.
எனக்கும் அண்ணனுக்கும் இடையில் பிரச்சனை வேண்டாம். முடித்து விடுங்கள் என உயர் அதிகாரிகளையும், செய்தியாளர்களை கெஞ்சியது நீ. அப்போது நான் எதற்கு அவரிடம் போய் பேசனும் என்று புறப்பட்டு சென்றேன்.
நீதான் பெரிய அப்பா டக்கராச்சே... துப்பாக்கி, பட்டாலியன் வைத்திருக்கியே... எனக்கு பாதுகாப்பு இல்லை எனச் சொல்வது கேவலமாக இல்ல உனக்கு!
பொதுவெளிக்கு வந்துட்ட.. நீ சரியான ஆண் மகனாக இருந்தால் எனக்கு தண்டனை பெற்றுக்கொடு பார்த்திடுவோம். நீ தான் காக்கிச் சட்டையில் மறைந்து இருக்கும் குற்றவாளி!
நீ செல்போன் திருடன்... ஆடியோ திருடன்... எங்களின் 16 செல்போன்களை திருடி, ஆடியோவை திமுக ஐடி விங்க் காரனிடம் கொடுத்து வெளியிட்டவன் நீ... ஆடியோவை வெளியிட்ட அயோக்கிய பய நீயா.. இல்லையா?" என்று சீமான் தெரிவித்தார்.