பொங்கல் பண்டிகை எதிரொலி - தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்.!
Seithipunal Tamil January 04, 2025 05:48 AM

தமிழகம் முழுவதும் வருகின்ற 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த விடுமுறையை ஒட்டி, தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளதாவது:- "பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஜன் சதாப்தி சிறப்பு அதி விரைவு ரயில் இயக்கபடும்.

இந்த ரெயில் மறு மார்க்கமாக திருச்சியில் இருந்து 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆம் தேதிகளில் மாலை 5.35 மணிக்கு தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது.

ரெயில் எண். 06190/06191 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் – திருச்சிராப்பள்ளி ஜன் சதாப்தி அதிவிரைவு சிறப்பு ரயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் விவரம் பின்வருமாறு.

திருச்சியில் இருந்து மாலை 5.35 க்கு புறப்படும் இந்த ரயில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திரிபாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இரவு 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல் தாம்பரத்திலிருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு திருச்சி சென்றடையும்" என்றது தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.