இன்று சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாணவிகள் அணிந்து வந்த கருப்பு துப்பட்டாவை அகற்றிய பிறகு நிகழ்ச்சிக்கு அனுமதித்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்த உடன் மீண்டும் குறித்த மாணவிகளிடம் துப்பட்டாவை கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், "கருப்பு சால்வை" அணிந்த மாணவிகள் மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன் அவற்றை கழற்றுமாறு கேட்டுக் கேட்டுக் கொண்டனர்.
திமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். இது எவ்வகை எதேச்சதிகாரம்? என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருப்பு சால்வை நீக்கம் விவகாரம் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.