தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.
இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கலையரசன் "தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்களேக் கொடுக்கின்றனர். ஆனால் மலையாள சினிமாவில் அப்படி இல்லை. ஒருவர் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடிக்கலாம். அதனால் இனிமேல் நான் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதை நிறுத்தப் போகிறேன். கதையில் சாவு என்று இருந்தாலே என் பெயரை எழுதிவிடுகிறார்கள்" எனக் கூறியுள்ளார்.