தங்கத்தின் விலையானது வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டில் ஒரு சவரன் 44ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது தற்போது 60ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டுள்ளது. எனவே தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சனிக்கிழமை சற்று குறைந்த தங்கத்தின் விலையானது நேற்று எந்தவித மாற்றம் இல்லாமல் விற்பனையானது. அதன் படி ஒரு கிராம் ரூ. 7,215-க்கும் ஒரூ சவரன் ரூ.57,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றும் தங்கத்தின் விலையானது எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 7,215-க்கும் ஒரூ சவரன் ரூ.57,720விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை உயராத காரணத்தால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வெள்ளி விலை, ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.100,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.