விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்யும்படி தனியார் பள்ளிகள் இயக்குனர் முத்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பான தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை எனவும், 03 மணிக்கு பிறகுதான் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதாவது, குழந்தை மதியம் 02 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாக தரப்பில் இருந்து கூறப்பட்டது. ஆனால், சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 01.50 எனக் காட்டுகிறது.என்பதை குறிப்பிட்டு பள்ளி நிர்வாகத்தின் மீது குறித்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி உள்ளதால் உடனடியாக, அறிக்கை சமர்ப்பிக்குமாறு தனியார் பள்ளிகள் இயக்குனர் முத்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.