வெளியானது இட்லி கடை படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்.!
Seithipunal Tamil January 01, 2025 05:48 AM

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதையடுத்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 7-ம் தேதி வெளியாக உள்ளது. 

இதைத் தொடர்ந்து அவர் நான்காவது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படத்தை உருவாக்கி வருவதாக அறிவிப்பு வெளியானது. தனுஷே இயக்கி நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அருண்விஜய், ராஜ்கிரண், நித்யாமேனன் உள்ளிட்டோர் இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாயின.

இந்த நிலையில் தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப்படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.