தென் கொரியாவில் 175 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் நிற்காமல் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானம் தரையிறங்கும் போது லேண்டிங் கியரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஓடுபாதையில் நிற்காமல் வேகமாக விமானம் சென்றது. நேராக ரன்வே சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் இருந்து கரும்புகைகள் வெளியேறியது.
இந்நிலையில் முவான் விமான விபத்தில் இருவர் தவிர, மற்ற பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாங்காக்கில் இருந்து முவான் சென்ற விமானத்தில் 175 பயணிகளும் பைலட் உள்ளிட்ட 6 பணியாளர்களும் இருந்தனர். முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது நிகழ்ந்த விபத்தில் 179 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. உயிர் பிழைத்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.