தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!
Webdunia Tamil December 29, 2024 09:48 PM


தென்கொரியாவில் நிகழ்ந்த கோர விமான விபத்தில் முதலில் 38 பேர் மட்டுமே பலியானதாக கூறப்பட்ட நிலையில் அதன் பின் 120 பேர் பலியானார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி அதில் பயணம் செய்த 181 பேர்களில் 179 பேர் பலியாகிவிட்டதாகவும், மீதமுள்ள இரண்டு பேரும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகாலை தென்கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள முவாம் என்ற சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஒரு விமானம் தரையிறங்கும் போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய அந்த விமானம் சுவற்றில் மோதியதை அடுத்த தீப்பிடித்து எரிந்தது.

இதில் பயணம் செய்த 175 பயணிகள் மற்றும் ஆறு விமான ஊழியர்களில் 179 பேர் பலியாகி விட்டதாகவும், இரண்டு பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.

32 வண்டிகளில் சென்று தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் தீவிர முயற்சி எடுத்த போதிலும் பயணிகளை காப்பாற்ற முடியவில்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Edited by Mahendran
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.