மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரேசர் பாய்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் ஒருவர் சக வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சுருண்டு கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த நபர் விஜய் பட்டேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.