ஹோட்டல் அறையில் வீசிய துர்நாற்றம்.. மர்ம முறையில் பிணமாக கிடந்த நடிகர் திலீப்… அதிர்ச்சியில் திரையுலகினர்..!!!
SeithiSolai Tamil December 30, 2024 04:48 AM

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் திலீப் சங்கர். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது இவர் மலையாளத்தில் பஞ்சாக்னி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த நாடகத்தின் சூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இவர் ஷூட்டிங்குக்காக அங்கு சென்ற நிலையில் திடீரென சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் அவர் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.

அவர் அறையில் தங்கிய பிறகு கடந்த இரு தினங்களாக படக்குழுவினர் அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் அழைப்பை எடுக்காத நிலையில் பின்னர் ஹோட்டலுக்கு சென்று விசாரித்த போது தான் அவர் இரண்டு நாட்களாக அறையை விட்டு வெளியே வராதது தெரிய வந்தது. பின்னர் ஹோட்டல் ஊழியர்கள் அறையைத் திறந்த போது துர்நாற்றம் பேசியது. அங்கு நடிகர் திலீப் பிணமாக கிடந்தார். அவர் உடல்நல குறைவினால் அவதிப்பட்டு வந்த நிலையில், மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவருடைய திடீர் மரணம் கேரளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.