வங்கதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோர் போலி இந்திய ஆவணங்களுடன் இந்தியாவில் குடியேறி இருப்பதாக கூறப்படும் நிலையில் அவ்வப்போது இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களில் சட்டவிரோதமாக குடியேறிய 16 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்தியாவில் குடியேறிய வங்கதேசத்தை சேர்ந்த 8 ஆண்கள் மற்றும் ஒரு பெண் மற்றும் என ஒன்பது வங்கதேசத்தினர் இந்திய வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் உள்ள நாசிக் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மங்கோலி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் தங்கி இருந்த ஏழு வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் சில பொருட்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 43 வங்கதேசத்தினர் கைது செய்த நிலையில் தற்போது மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva